என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுவை போலீஸ்காரர் கைது
- ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஐதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகளும் விழாவில் பங்கேற்க ஜிப்மருக்கு வந்தனர்.
புதுச்சேரி, செப்.4-
ஜிப்மரில் மருத்துவ மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலாச்சார விழாபுதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் கலாச்சார விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் புதுவை வந்துள்ளனர்.
அதுபோல் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகளும் விழாவில் பங்கேற்க ஜிப்மருக்கு வந்தனர். கலாச்சார விழா முடிந்த பின்னர் அக்கல்லூரி மாணவி ஒருவர் ஜிப்மர் வளாகத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அலறல் சத்தம் போட்டார். ஆனால் இதனை அங்கிருந்த காவலாளிகளோ, ஜிப்மர் ஊழியர்களோ கண்டு கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அந்த வாலிபர்கள் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்த மாணவி சக மாணவ-மாணவிகளிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் காட்டேரிக்குப்பம் அருகே தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் ஒருவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. இதையடுத்து கண்ணனை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணிமுடிந்து தனது உறவினர் சிவக்குமார் (வயது20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மாணவியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் கண்ணன் மற்றும் அவரது உறவினர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் கண்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்