என் மலர்
புதுச்சேரி

சன்னியாசிகுப்பம் தார் சாலையில் உருவான பள்ளம் சீரமைக்கப்பட்ட காட்சி.
தொடர் மழையின் காரணமாக திடீர் பள்ளம்
- திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரீம் கம்பெனி அருகே தொடர் மழை பெய்ததன் காரணமாக தார் சாலை திடீரென பள்ளமானது.
- இதனை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள சுப்ரீம் கம்பெனி அருகே தொடர் மழை பெய்ததன் காரணமாக தார் சாலை திடீரென பள்ளமானது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனே அவ்வழியாக சென்று வந்தனர். இதையடுத்து அப்பகுதி பொது மக்கள் எம்.எல்.ஏ. அங்காளனிடம் உடனடியாக சாலையை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அப்பகுதிக்கு அங்காளன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சாலையை உடனடியாக சரி செய்ய பொதுப்பணி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குஉத்தரவு பிறப்பித்தார்.
பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் பொதுப்பணித்துறை ஊழியர்களைக் கொண்டு சாலையை சரி செய்யும் விதமாக பள்ளத்தில் கருங்கல், சக்கைகளை கொட்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இப்ப பணியின் போது அங்காளன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.






