search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தும்
    X

    கோப்பு படம்

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தும்

    • வைத்திலிங்கம் எம்.பி பேட்டி
    • ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும். புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களால் தேர்வான அரசுக்குதான் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாரையும் எப்போது மதிக்காத மத்திய அரசு தீர்ப்பின் உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வராமல் உள்ளது. புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரம் உள்ளது.

    ஆனால் எப்போதும்போல, பா.ஜனதா மத்திய அரசின் கைப்பாவையான கவர்னர் தமிழிசை, தீர்ப்பினை நடைமுறைப்படுத்தாமல் இருக்க, தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கூறியுள்ளார். புதுவை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். இவை அனைத்தும் ஒரே சட்டவிதிமுறைகள் இருப்பதால் தீர்ப்பு பொருந்தும்.

    புதுவையில் கவர்னர் தமிழிசை இதற்கு மறுப்பு கூறியுள்ளார். இதிலிருந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பாக இருந்தாலும் அதை மதிக்கமாட்டேன் என்று தடுப்பு பேசுவதை அறிய முடிகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தோர் இப்படிதான் செய்வார்கள் என்பதற்கு இந்த வார்த்தைகளே உதாரணம். தனது அதிகாரம் பறிபோகக்கூடாது என்பதற்கான நடவடிக்கை எடுக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுவையில் ஆளும் கூட்டணிமியிலுள்ள பா.ஜனதா- என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதை தட்டிக்கேட்காதது வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மக்களுக்கு உரிய பணி செய்வதற்கான அதிகாரத்தை ஆளும் கட்சிகள் பெறாதது ஏன்.?

    புதுவை காமராஜர் என தன்னை அழைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி, மதுபானக்கடைகளை ஊக்குவிப்பதால் காமேராஜர் பெயரை பயன்படுத்த கூடாது. கமிஷன் ஆட்சியாக கர்நாடகத்தில் பா.ஜனதா மாறியதால் தூக்கியெறியப்பட்டது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மதுபானக் கொள்ளை கமிஷனில் தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் மக்கள் தூக்கியெறிவார்கள்.

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி கூறினார்.

    Next Story
    ×