search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கல்விக் கட்டணத்தை அதிகளவில் உயர்த்த கூடாது
    X

    கோப்பு படம்.

    கல்விக் கட்டணத்தை அதிகளவில் உயர்த்த கூடாது

    • மாணவர், பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தல்
    • தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 650 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு ஒதுக்கீடாக நடப்பாண்டில் 239 மருத்துவ இடங்களை பெற்றுள்ளோம்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உயர் கல்வி கட்டண குழு தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கந்தமாளை சந்தித்து புதுவை மாணவர்,பெற்றோர் நல சங்க தலைவர் வை.பாலா வாழ்த்து தெரிவித்தார்.

    அவரிடம் அவர் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2022,2023 -ம் கல்வியாண்டில் உயர்கல்வி கட்டணக் குழுவால் இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) படிப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயி க்கப்பட்ட கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மட்டும். தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 65 விழுக்காடு இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 விழுக்காடு இடங்களும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கு பெறப்பட்டது. புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 650 எம்.பி.பி.எஸ் இடங்களில் அரசு ஒதுக்கீடாக நடப்பாண்டில் 239 மருத்துவ இடங்களை பெற்றுள்ளோம்.இது 35 விழுக்காடு ஆகும்.

    மேலும் புதுவை அரசு மருத்துவக் கல்லூரியான இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் மொத்தம் உள்ள 180 எம்.பி.பி.எஸ் இடங்களில் புதுவை அரசு ஒதுக்கீடாக 131 இடங்கள் பெறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 370 இடங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது.

    தற்போது புதுவையில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடாக 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் அறிவிக்க ப்பட்டுள்ளது. மேலும் இந்திராகாந்தி மருத்து வக்க ல்லூரி கூட்டுறவுத்து றையின் கீழ் செயல்ப டுவதால் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் ரூ. 1 லட்சத்து40 ஆயிரம் எனவும், 2,3, மற்றும் 4-ம் ஆண்டுகளுக்கு ரூ. 74 ஆயிரம் என ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    புதுவையில் பிற்படுத்த ப்பட்ட, மிகவும் பிற்படுத்த ப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துத் தரவேண்டும் கட்டணத்தை அதிக அளவில் உயர்த்த கூடாது என புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலசங்கம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×