search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வைத்திலிங்கம் எம்.பி. ஏனாம் பிராந்தியத்தில் ஆய்வு
    X

    கோப்பு படம்.

    வைத்திலிங்கம் எம்.பி. ஏனாம் பிராந்தியத்தில் ஆய்வு

    • புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
    • இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் ஒரு நாள் பயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏனாமில் சில பணிகளுக்கு நிதி ஒதுக்கி கொடுத்திருந்தார். அப்பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்பட்ட நிதியை சரியாக செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், திட்ட ங்களுக்கு தேவைப்படும் நிதியை தர தயாராக இருப்ப தாகவும் உறுதியளித்தார்.

    இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் நடைபெற்ற 4-வது பிட் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். பின்னர் ஏனாமில் கட்டப்பட்டுவரும் 100 படுக்கைகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை கிளை யையும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×