என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
Recap 2023
2023 ரீவைண்ட் - உலகை வாட்டிய வரலாறு காணாத வெப்பம்
- 2023ல் ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் அதிகரித்தது
- புளோரிடா மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறின
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2023ல் உலகளாவிய வெப்பநிலையில் கடும் மாற்றம் காணப்பட்டது.
வல்லுனர்கள் நேரடியாக பூமியின் வெப்பத்தை கணக்கிட தொடங்கியதில் இருந்து 174 வருடங்களில் இத்தகைய வெப்பம் இருந்ததில்லை என்றும், நேரடியாக கணக்கிடாமல் அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட சில கணக்கீடுகளின்படி 1,25,000 வருடங்களில் இந்த அளவு அதிக வெப்பம் ஏற்பட்டதில்லை எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆங்காங்கு காடுகள் தீப்பற்றி எரிவதும், அதிகளவு வறட்சியும் இவ்வருடம் அதிகரித்தது.
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் (Arizona) பல வாரங்களுக்கு அதிக வெப்பம் மக்களை வாட்டியது. வெப்பம், தொடர்ந்து 110 டிகிரிக்கு மேல் 31 நாட்களுக்கு நிலவியது.
புளோரிடா (Florida) மாநிலத்தில் பவழ பாறைகள் வெள்ளை நிறமாக மாறி அதிக வெப்ப நீரினால் கரை ஒதுங்கின.
சீனா, தெற்கு ஐரோப்பா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது.
படிம எரிபொருள் (fossil fuel) பயன்படுத்துவதால் வெளியாகும் புகையினால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை இதற்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கு தீர்வு காணவில்லை என்றால் எதிர்கால தலைமுறை இப்பூமியில் வாழ்வது கடினமாகி விடும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.