என் மலர்
Recap 2023
2023 ரீவைண்ட்: சாதனை படைத்த இஸ்ரோ
- நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 செயற்கைக்கோளை ஜூலை 14-ம் தேதி இஸ்ரோ அனுப்பியது.
- இந்த விண்கலத்தில் இருந்து ஆகஸ்ட் 23-ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரனில் சாதித்த சந்திரயான்
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வுசெய்ய இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 14-ம் தேதி அனுப்பியது. விக்ரம் லேண்டர் பிரிந்துசென்று ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்தது.
நிலவில் கால் பதித்த 4வது நாடு இந்தியா
நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த ஆகஸ்டு 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. விண்வெளித்துறையில் இந்தியா படைத்த முக்கிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
ஆதவனை நோக்கிப் பயணித்த ஆதித்யா எல்-1
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை இது பெற்றது.