search icon
என் மலர்tooltip icon

    Recap 2024

    2024 ரீவைண்ட்: டான்ஸ் ஆடும் மோடி முதல் டீப் ஃபேக் நடிகைகள் வரை.. A.I. அசுர வளர்ச்சியும் ஆபத்தும்
    X

    2024 ரீவைண்ட்: டான்ஸ் ஆடும் மோடி முதல் டீப் ஃபேக் நடிகைகள் வரை.. A.I. அசுர வளர்ச்சியும் ஆபத்தும்

    • பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் வைரலாகின
    • அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நிகழ்ந்தது.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த 2024 ஆம் ஆண்டு வெகு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். சமூக வலைத்தளம் முதல் வேலை செய்யும் இடம் வரை உலகம் முழுவதிலும் ஏஐ தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸப்பின் மெட்டா ஏஐ இந்த வருடம் அறிமுகமானது.

    ஏஐ வளர்ச்சியும், அதன் தவறான பயன்பாடும், அது குறித்த அறிவுஜீவிகளின் எச்சரிக்கையும் இணைந்தே வந்துள்ளது. சாட்ஜிபிடி, டீப் fake உள்ளிட்டவை வார்த்தைகள் மக்கள் மத்தியில் புழங்கத் தொடங்கின. பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரை மர்ம நபர்களின் டீப்ஃபேக் சேட்டைகளுக்கு உள்ளாகினர்.

    குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் முதல் மேடைகளில் அவரின் நடனம் வரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைய வாசிகள் உருவாக்கி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் என சமூக ஊடகங்கள் தோறும் டிரண்ட் செய்தனர்.

    அவ்வாறு ஏஐ மோடி நடமாடும் ஒரு வீடியோவுக்கு பிரதமர் மோடியே தனது எக்ஸ் பக்கத்தில், உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற முக்கிய நபர்களில் ஏஐ உருவங்கள் பி[பேஷன் வாக் நடக்கும் வீடியோவை எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

    கடந்த வருட இறுதியில் வெளியான தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவில் ஆபாசமான டீப் fake பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதன் பின் பாலிவுட் பிரபலங்கள் பலரும் டீப் fake க்கு இறையாகினர். பல சமூக வலைதள பக்கங்களில் நடிகைகள், ஆலியா பட், க்ரிதி சனோன், திஷா பதானி, தமன்னா பாட்டியா, சமந்தா ரூத் பிரபு,மாளவிகா மோகனன், கஜோல் உள்ளிட்டோர் பிகினி உள்ளிட்டடோரை சித்தரித்து போலி டீப் -fake வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வளம் வந்தன.

    பாஜகவுக்கு எதிரான தான் பேசுவதுபோல் வெளியான deepfake ஆல் அதிர்ந்த தீபிகா படுகோனே கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் கடந்த அக்டோபரில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தார்.

    ஒரு Reddit பயனர் சமீபத்தில் ஒரு மாணவருக்கும் கூகுள் ஜெமினி ஏஐக்கும் இடையிலான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார், அதில் AI சாட்பாட், மாணவர் "இறக்க வேண்டும்" என்று பரிந்துரைத்தது.

    மேலும் கேம் ஆப் திரோன்ஸ் காதாபாத்திரத்தின் சாட் ஜிபிடி உடன் காதல் கொண்ட அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அக்டோபரில் நிகழ்ந்தது.

    ஓபன் ஏஐ இன் மனிதகுலத்துக்கு அபாயகரமான கொள்கைகள், மற்றவர்களின் அறிவுசார் தரவுகளை அனுமதியில்லாமல் எப்படி ஓபன் ஏஐ பயன்படுத்துகிறது என்பது குறித்து நியூ யார்க் டைம்ஸ் கு பேட்டி அளித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி [26 வயது] கடந்த நவம்பரில் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.

    சுஷீர் பாலாஜியின் பேட்டியின் பின் விளைவுகளால் ஓபன் ஏஐ நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் அவரது மர்ம மரணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷீர் பாலாஜி மரணம் தற்கொலை மாதிரி தெரியவில்லை என எலான் மஸ்க்கும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×