என் மலர்
பாரிஸ் ஒலிம்பிக் 2024
விண்வெளியில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம்.. மினி ஜோதியை ஏந்திய சுனிதா வில்லியம்ஸ் - வீடியோ
- முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
- ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் இரவு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் பாரிஸ் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் போட்டிகளுடன் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.
அந்த வகையில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 6 விண்வெளி வீரர்கள் மினி ஒலிம்பிக் தீப்பந்த ஜோதி போன்ற பொம்மையை ஏந்தியும் பளு தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விலையுவது போன்றும் அவர்கள் பாவனை செய்து மகிழும் 2 நிமிட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவர் என்று திட்டமிடப்பட்ட நிலையில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக பூமி திருப்ப முடியாமல் அவர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.