search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "000 cubic feet of water released for"

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து இன்று வினாடிக்கு 684 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.44 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று வினாடிக்கு 3, 222 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து இன்று வினாடிக்கு 684 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.44 அடியாக உள்ளது. இதேபோல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் தடப்ப ள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 1,750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணை 105 அடியை நெருங்கி வருகிறது. 

    ×