search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "125 அடி சிலை"

    கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டத்தில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க அம்மாநில அரசு இன்று தீர்மானித்துள்ளது. #Karnatakagovernment #Cauvery
    பெங்களூரு:

    கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று நடைபெற்றது.



    மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும். அந்த அருங்காட்சியகத்தின் உச்சியில் காவிரி தாய்க்கு  125 அடி உயரத்தில் சிலை அமைக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு இந்த சிலையும், அருகாமையில் 360 அடியில் கண்ணாடியால் ஆன இரு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் பங்களிப்புடன் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்துக்கு தேவையான நிலம் மட்டும் அரசு ஒதுக்கீடு செய்யும் என மந்திரி சிவக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். #Karnatakagovernment #Cauvery 
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடத்தப்பட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார், சிப்காட் செயலாளர் சிவானந்தம் உள்பட சுமார் 100 பேர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் 75 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் வட்ட பொருளாளர் வடிவேல், நிர்வாகிகள் முருகன், மகேஷ், அமாவாசை முன்னிலையில் மாநில குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் சுந்தர் ராஜா உள்பட 50 பேர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர்.

    பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது கோ‌ஷங்களையும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

    125 கோடி மக்கள்தான் என் பலம். மக்களுக்காகவே என்னுடைய எல்லா நேரத்தையும் செலவிட்டு வருகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார். #NarendraModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பின்தொடர்ந்து வருபவர்களின் பதிவுகளுக்கு மோடி உடனுக்குடன் பதிலும் அளித்து வருகிறார்.

    மும்பையை சேர்ந்த ஷில்பி அகர்வால் என்ற பெண், ‘மோடிஜி நீங்கள் எப்போதும் புன்னகையுடன் இருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு மோடி, ‘புன்னகை’ என்ற வார்த்தையை எடுத்து பதிலாக பதிவிட்டு இருந்தார்.

    மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘இந்த வயதிலும் நீங்கள் அயராது பணியாற்றி வருகிறீர்களே’ என பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மோடி, ‘125 கோடி மக்கள்தான் என் பலம். மக்களுக்காகவே என்னுடைய எல்லா நேரத்தையும் செலவிட்டு வருகிறேன்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

    ஷோபா ஷெட்டி என்ற பெண்ணின் டுவிட்டர் பதிவில், ‘நாடாளுமன்ற மக்களவையில் உங்களின் பேச்சு பாராட்டுக்குரியது. இந்தியா மோடியை நம்புகிறது’ என்று தெரிவித்து இருந்தார். அதற்கு மோடி, ‘உங்களின் அன்பான வார்த்தைக்கு நன்றி’ என்று பதில் அளித்தார்.

    மேலும் பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார்.   #NarendraModi  #tamilnews
    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 8 அடி உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை சாரல் மழையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இதுபலத்த மழையாக அதிகரித்தது.

    இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி 116.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 10-ந் தேதி 118 அடியாக உயர்ந்தது. நேற்று இதுமேலும் அதிகரித்து 121.10 அடியாக உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்த நிலையில் இன்று காலை மேலும் 3½ அடி உயர்ந்து நீர்மட்டம் 124.70 அடியை அடைந்தது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    எப்போதும் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 125 அடியை நெருங்கி உள்ளதால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வரும் 18-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது முல்லைப் பெரியாறு அணைக்கு 9479 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 3589 மி. கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு 353 கன அடி தண்ணீர் வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 36.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 6 படகுகளும், வனத்துறை சார்பில் 5 படகுகளும் என மொத்தம் 11 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை முதல் தேக்கடியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்ததால் படகு குழாம் வெறிச்சோடி காணப்பட்டது.

    லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் சமயங்களில் இங்கு மின் உற்பத்தி நடைபெறும். தற்போது 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் 104 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து நீர் திறக்கும் வாய்ப்பு இருப்பதால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    நேற்று ஒரே நாளில் பெரியாறு அணையில் 805.8 மி.மீ., தேக்கடியில் 52.4 மி.மீ. மழை அளவு பதிவானது.
    ×