search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "13 people were arrested for"

    • சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சத்தி-மைசூர் ரோடு காரப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. பஸ்சில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தி கொண்டிருந்தபோது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரது பையை சோதனை செய்ததில் கர்நாடகா அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கி வந்து சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அந்த வாலிபர் கோவை சேனைக்கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த தமிழரசன் (30) என தெரிய வந்தது. இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×