என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "2 transgenders stabbed"
- வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
- 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சூலூர்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர்கள் யமுனா(வயது24), சைலஜா(22). இவர்கள் 2 பேரும் திருநங்கைகள்.
நேற்று இரவு யமுனாவும், சைலாஜாவும் கோவை சிந்தாமணிபுதூர் புறவழிச்சாலையில் நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி திருநங்கைகள் அருகில் சென்று பேசினர். திடீரென வாலிபர்கள் 2 பேரும் திருநங்கைகளிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருநங்கைகளை குத்தினர்.
இதில் 2 திருநங்கைகளுக்கும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் நின்றிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பியோடினர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் 2 திருநங்கைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.