என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2nd Phase of Excavation"
- வெம்பக்கோட்டையில் விரைவில் தொடங்க உள்ள 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட உள்ளது.
- அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த ஆண்டு முதலாம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.
அகழாய்வில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தம் மூலம் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பதக்கம், சுடுமண்ணாலான தொங்கட்டான், பகடைக் காய், அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு, அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் 2-ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீண்டும் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட அகழாய்வின் முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும், அவைகள் வெளி நாடுகளில் வணிகம் செய்ததற்கான சான்றாக பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டறியப் பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியை 2ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரி வித்துள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் வெளி நாடுகளுடன் கொண்டுள்ள வணிக தொடர்பை அறிய முடியும்.