என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "3 houses"
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
- பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த 3 வாட்ச் திருடு போனது தெரிய வந்தது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள லெட்சுமி மில் மேலக்காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 61). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவருடைய மகள் கோவையில் படித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கோவையில் படிக்கும் மகளை பார்க்க சென்று விட்டு நேற்று நள்ளிரவு சந்திரசேகர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின் பக்க கதவு, உள்ளே பீரோ மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த 3 வாட்ச் திருடு போனது தெரிய வந்தது. 2 வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி குங்கும சிமிழ் மற்றும் சில வெள்ளி பொருள்களை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து வைத்து வாழை மரத்திற்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர்.
ஆனால் அதை எடுத்து செல்லவில்லை. அதை போன்று மற்றொரு வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றுள்ளதால் அங்கு என்ன திருடு போய் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் வந்த பிறகு தான் என்ன திருடு போய் இருக்கும் என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போல் இனாம் மணியாச்சி மேம்பால சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்பகுதியில் வசிக்கும் விஜயக்குமார் (46). இவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார்.
இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.54ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையம் பின்புறம் உள்ள வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்