search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "500 cubic feet for irrigation"

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 82.76 அடி யாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை யில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்தி ற்காக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் தடுப்பு சுவர் கட்டும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலை யில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வழக்க ம்போல் ஆகஸ்ட் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்ப டும் என அரசாணை வெளியிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 15-ந் தேதி பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவா னி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலே யே தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் பாசன விவசாயி கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வாய்க்கால் சீரமைப்பு பணிகள் முடிவடையாத தால் தண்ணீர் நிறுத்தப்ப ட்டுள்ள தாகவும், 3 நாட்களில் பணி கள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படும் என நீர் வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில் தற்போது சீரமைப்பு பணி கள் முடிவடைந்து நேற்று முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு முதற்கட்டமாக 200 கனஅடி தண்ணீர் திறக்க ப்பட்டது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்ப வானி வாய்க்கால் பாசன த்திற்கு 500 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்க ப்பட்டுள்ளது.

    தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.76 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 162 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொ ண்டிருக்கிறது.

    பாசனத்தி ற்காக தடப்ப ள்ளி அரக்கன் கோட்டை க்கு 500 கனஅடி, காலிங்க ராயன் பாசனத்தி ற்கு 350 கனஅடி, குடிநீரு க்காக பவானி ஆற்று க்கு 100 கனஅடி என மொத்தம் 1450 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×