search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "887 cubic feet"

    • மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்ப ட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடி 1,534 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 4,887 கனடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 550 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. 

    ×