என் மலர்
நீங்கள் தேடியது "A break in the pip"
- வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை நிறுத்தம்
- பணி முடிந்ததும் குடிநீர் விநியோகம்
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதில் புதைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பாலாற்றில் புதைக்கப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் இரும்பு குழாய் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது.
இதனால் பச்ச குப்பத்தை தாண்டி காவிரி குடிநீர் சரிவர வரவில்லை.
இது பற்றி தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டனர். குழாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் முடியவில்லை. இதனால் குழாயில் வரும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது.
இன்று 2-வது நாளாக குடிநீர் குழாய் இணைப்புகளை சரி செய்யும் பணி நடந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்:-
பச்சகுப்பம் பாலாற்றில் காவிரி குடிநீர் இரும்பு குழாய் இணைப்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி குடிநீர் சப்ளை இன்று நிறுத்தப்பட்டுள்ளது. வெல்டிங் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.
இன்று மாலை பணி முடிந்துவிடும். இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வழக்கம் போல காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றனர்.






