என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A sudden protest by the public"
- 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர்.
- செல்போன் டவர் அமைக்க வேலை நடைப்பெறுவதாக கூறினர்.
வடவள்ளி,
கோவை வடவள்ளியை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இன்று காலை தனியாருக்கு செந்தமான இடத்தில் பொக்லைன் கொண்டு ஆழமாக குழி தோண்டும் பணி நடைப்பெற்றது. அருகில் குடியிருப்பவர்கள் இது குறித்து கேட்ட பொழுது செல்போன் டவர் அமைக்க வேலை நடைப்பெறுவதாக கூறினர்.
இந்த தகவல் லட்சுமி நகர் குடியிருப்பு சங்கத்தினர் வாட்ஸ்அப் குழுவில் பரவியது. சம்பவ இடத்திற்கு சிறிது நேரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளும் வந்தனர். அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் அந்த பகுதி கிணறு இருந்த பகுதி எனவும், செல்போன் டவர் அமைத்தால் இங்கு வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், மற்றும் பறவைகள் கதிர் வீச்சால் பாதிக்கப்படும் என்று கூறி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வடவள்ளி போலீஸ் நிலைய போலீசார் வந்து விசாரணை நடத்தி சென்றனர். தொடர்ந்து உடனடியாக பணியை நிறுத்த வேண்டும். நாளை வடவள்ளி காவல் நிலையம் , மாவட்டம் கலெக்டரிடம் புகார் மனு இப்பகுதி குடியிருப்பு சங்கம் சார்பாக கொடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார். நடவடிக்கை எடுக்காத நிலையில் மறியலில் ஈடுபட்ட உள்ளதாக தெரிவித்தனர்.