search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A sudden rise in prices"

    • பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது.
    • நாமக்கல் மாவட்டம் பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை, காக்கட்டான், ரோஜா, செவ்வந்தி, அரளி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கும், ரோஜா கிலோ ரூ.120-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.70-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ. 400-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏல‌த்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2000-க்கும், சம்பங்கி கிலோ ரூ120-க்கும், அரளி கிலோ ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.250-முல்லைப் பூ கிலோ ரூ.1400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.1500-க்கும், காக்கட்டான் ரூ.1000-த்திற்கும் ஏலம் போனது.

    பனிப்பொழிவு காரண மாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், விலை‌ உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

    ×