search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadipur festival i"

    • கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது.
    • பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட சோழவந்தான் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது. ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 21 வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    வளையல், ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சியளித்தார். பின்னர் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் சார்பில் வளையல், ஜாக்கெட்துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முகவேல் பூபதி, கவிதா, வசந்த் செய்திருந்தனர்.

    தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் படி ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 வீதிகளில் உலா வந்தார். இதைத்தொடர்ந்து பூஜைகள் நடந்தது. செயல் அலுவலர் பாலமுருகன், மகளிர்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    உச்சி மகாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். சோழ வந்தான் திரவுபதி அம்மன்கோவில், காடுபட்டி திரவுபதி அம்மன்கோவில் ஆகிய கோவில்களிலும் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதைத்தொடர்ந்து ஆண்டாள் சிறப்பு அலங்கா ரத்துடன் கேடயத்தில் வீதி உலா வந்தார். பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    ×