search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accidental fire"

    • அருகே உள்ள வீடுகளுக்கு தீ பரவி பொருட்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் மேல் மிட்டாளம் பகுதியில் வீடுகளுக்கு அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது.

    நேற்று இரவு அந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனால் அருகே உள்ள வீடுகளில் தீப்பிடித்து மள மளவென எறிய தொடங்கியது.

    பின்னர் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் வீட்டின் மாடியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னையில் இருந்து வாணியம்பாடியில் உள்ள கடைகளுக்கு அரிசி பருப்பு, நெய் மளிகை பொருட்கள் சைக்கிள் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு லாரி ஒன்று வேலூர் வழியாக சென்றது.

    லாரியை ஆம்பூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை வேலூர் அடுத்த கொணவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது லாரியின் பின்பகுதியில் லேசான புகை வந்தது.

    லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் டிரைவர் இதனைக் கண்டு உடனடியாக லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்தார். லாரி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது. அதற்குள் தீ மளமளவென லாரி முழுவதும் பரவி பற்றி எரிய தொடங்கியது.

    இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வேலூர் தீயணைப்பு நிலையத்தில் வாகனங்கள் இல்லாததால் காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் லாரியில் இருந்த ரூ 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்த்து அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.

    தீ விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளத்துப்பாளையத்தில் தேசிய மையமாகப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.
    • மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்தது.

    தாராபுரம் :

    தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையத்தில் தேசிய மையமாகப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் நேற்று வழக்கு போல் பணியை முடித்து வங்கியை மூடிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வங்கியில் இருந்து கரும்புகள் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வங்கியின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது வங்கியின் மேலாளர் அறையில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தி அணைத்தனர். இருந்த போதிலும் மேலாளர் அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

    தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பல பல லட்சம் நகை, பணம் தப்பியது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தின போது மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது தெரிய வந்தது.

    ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத விதமாக துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்ந்ததில் மூத்த ராணுவ அதிகாரி மஹாதிக் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குந்த்ரூ ராணுவ தலமையகத்தில் கலோனியலாக இருப்பவர் மஹாதிக். தனது வாகனத்தில் இன்று அவர் செல்லும் போது, வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியதில் துப்பாக்கி கீழே விழுந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு மஹாதிக்கின் கழுத்தில் பாய்ந்துள்ளது.

    இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
    ×