search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Chief Secretary"

    • அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இத் திட்டப்பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சிப் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வாரச் சந்தை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கடைகள், வாரச் சந்தை கடைகள், நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி, உரக் கிடங்கில் உரமாக்கும் பணி, கசடு கழிவு மேலாண்மை திட்டப்பணி, அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா காங்கயத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வார்டு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள குடியிருப்புகளில் குப்பைகள் முறையாக பிரித்து வழங்கப்படுவதையும், அதனை தூய்மைப் பணியாளர்கள் சரியான நேரத்தில் சேகரிக்கிறார்களா? என்பது குறித்தும் பொது மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் நகரில் நடைபெற்று வரும் இத் திட்டப்பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் எஸ். வினீத், திருப்பூர் மாநகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன், காங்கயம் நகராட்சி ஆணையாளர் எஸ். வெங்கடேஷ்வரன், நகராட்சிப் பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வாய்க்கால் புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    அம்மாபேட்டை:

    உலக வங்கி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அம்மாபேட்டை அருகே கருங்காடு மேட்டூர் வலது கரை வாய்க்கால் புனரமைப்பு பணி, அந்தியூர், ஆப்பக்கூடல் ஏரி புணரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    அப்போது வலது கரை வாய்க்கால் பாசன விவசாயி கள் கால்வாய் புனரமைப்பு பணிகள் நல்ல முறையில் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகவும்,

    வாய்க்கா லின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைத்த தால் கால்வாயி லிருந்து நீர் கசிவால் வேளாண் பயிர்கள் சேதம் ஆவது தடுக்கப்பட்டி ருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடியவர் விவசாயிகளிடம் என்னென்ன பயிர்கள் எந்தெந்த சமயங்களில் பயிர் செய்துவருகிறீர்கள் என்றும், எந்த காலகட்டத்தில் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது,

    எத்தனை மாதங்கள் வரை தண்ணீர் செல்கிறது? திறக்கப்படக்கூடிய தண்ணீர் தங்கு தடை இன்றி அறுவடை சமயம் வரை விவசாயத்திற்கு கிடைக்கி றதா? என கேட்டறிந்தார்.

    இதில் நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் அருளழகன், செயற்பொறியாளர் சிவக்கு மார், உதவி செயற்பொ றியாளர் சாமிநாதன், பவானி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியா ளர்கள் கவுதமன், தமிழ்பா ரத், சுலைமான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாஆய்வு செய்தார்.
    • வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஈரோட்டுக்கு வந்தார்.

    இன்று காலை அவர் காளை மாட்டு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி மூலம் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். வணிக வளாகத்திற்குள் சென்று பணி குறித்து கேட்டு அறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சோலாரில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட வரும் பஸ் நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நகர் நல அலுவலர் பிரகாஷ், மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×