என் மலர்
நீங்கள் தேடியது "ADMK Headquarters"
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.
மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.
பின்னர், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை சுட்டிக் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண்களுக்கு எடப்பாடி பழனிசாமி பெப்பர் ஸ்பிரே விநியோகித்தார்.
மேலும், அன்பு சகோதரிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என்ற பெயரில் பெப்பர் ஸ்டிரோ மற்றும் எஸ்ஓஎஸ் உபகரணத்தையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. 7 அடி உயரத்தில் திறக்கப்பட்ட இந்தச் சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிலையை மாற்றியமைக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், புதிதாக ஜெயலலிதா சிலை வடிவமைக்கும் பணி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது. 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் ஜெயலலிதா சிலையை அவர் தத்ரூபமாக வடிவமைத்தார். அந்தச் சிலை கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று காலை 9.30 மணியளவில் திறக்கப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் புதிய சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். #JayalalithaaStatue #ADMK