என் மலர்
நீங்கள் தேடியது "Adversary dispute"
- இரு சக்கர வாகனத்தில் சென்ற அருணா தேவன் திடீரென்று கீழே விழுந்து விட்டார்.
- அருணாதேவன் மற்றும் ஆனந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருணா தேவன் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசேகரன் தந்தை தட்சிணாமூர்த்தி என்பவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்தபோது, இரு சக்கர வாகனத்தில் சென்ற அருணா தேவன் திடீரென்று கீழே விழுந்து விட்டார். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருணா தேவன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் ராஜசேகரனை திடீரென்று தாக்கி கத்தியால் வெட்டினர்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜசேகரனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து ராஜசேகரன் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அருணா தேவன், ஆனந்தவேல், அசோக் குமார், அன்பு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அருணாதேவன் மற்றும் ஆனந்தவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.