search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advertisement Banner"

    • அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
    • விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    அனுமதி பெறாமல் பதாகைகள், தட்டிகள், பேனர்கள் வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2-ந் தேதி, கலெக்டர் தலைமையில், துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், அனுமதியற்ற விளம்பர பதாகைகள் அகற்றுவது தொடர்பாக, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி, கிராம ஊராட்சிகளில், விளம்பர பதாகைகள் நிறுவ, கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் ஊராட்சிகளில் விளம்பர பதாகைகள் வைத்தால், ஊராட்சி நிர்வாகத்தால் உடனடியாக அகற்றப்படும். விதிமுறைகளை மீறி வைப்போருக்கு, அபராதம் அல்லது 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    காங்கயம் :

    காங்கயம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவில் விளம்பர பதாகைகள் உள்ளிட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் காங்கயம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, பழையகோட்டை சாலை, கரூர் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனரகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது :- காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் விளம்பர பதாகை, பிளக்ஸ் பேனர்கள் வைத்திட நகராட்சி ஆணையாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். தவறினால் நகராட்சி புதிய சட்ட விதிகளை மீறி வைக்கும் விளம்பர பதாகைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மற்றும் விளம்பரதாரரை முழு பொறுப்பாக்கி, அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி–னார்.

    ×