search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "African catfish"

    • கீழப்பாவூர் குளத்தில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை
    • கால்வாய் அருகில் ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் அதிக அளவில் துள்ளி விளையாடின.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் குளம் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு சிற்றாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. மேலப்பாவூர் குளம், கீழப்பாவூர் குளம் ஆகியவை நிரம்பிய பின்னர் அருணாப்பேரி குளம், நாகல்குளம், ஆலங்குளம் தொட்டியான்குளம் உட்பட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்லும்.

    இந்த நிலையில் தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கீழப்பாவூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் வந்தது.

    இந்நிலையில், பாவூர்சத்திரம்- சுரண்டை சாலையில் கீழப்பாவூர் குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் அருகில் ராட்சத ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் அதிக அளவில் துள்ளி விளையாடின. இதை ஏராளமான மக்கள் அங்கு உள்ள பாலத்தின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.

    வழக்கமாக குளத்தில் இருக்கும் கெளுத்தி மீன்கள் ஒல்லியான உடல்வாக்குடன் நீளமாக காணப்படும். ஆனால் மிகப்பெரிய அளவில் 10 கிலோவுக்கு மேல் எடை இருக்கக்கூடிய அளவுக்கு இருந்த இந்த மீன்களை பார்த்த மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த மீன்கள் இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த மீன்களை வீடியோ எடுத்து மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலருக்கு பொதுமக்கள் அனுப்பி விசாரித்தபோது அவை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மீனை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×