search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Chatti Procession"

    • 9-ம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு கோவில் முன்பு ஏராளமான பக்தாகள் கலந்து கொண்ட பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    புளியங்குடி:

    புளியங்குடியில் பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் நாக கன்னி யம்மன், பெரியபாளையத்து பவானி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 25-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    9 நாட்கள் நடைபெறும் திருவிழா

    9 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜையும், முளைப்பாரி, கும்மிபாட்டும் நடைபெற்றது. முக்கிய திருவிழாவான 8-ம் திருநாளான கடந்த 2-ந்தேதி காலை 5 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர் சன்னதியில் இருந்து குருநாதர் சக்தியம்மா தலைமையில் நேமிதம் இருந்த பக்தர்கள் 308 பால்குடம், தீர்த்தகுடம் ஊர்வலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பால்குடம், தீர்த்தகுடம் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா நிறைவு

    மாலை பாலவிநாயகர் கோவிலில் இருந்து அக்னி காவடி, அலகு குத்துதல், பூப்பெட்டி, முத்துப்பட்டி மற்றும் 508 பேர் அக்னிசட்டி ஊர்வவம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். குருநாதர் சக்தியம்மா தலைமையில் ஊர்வலம் தொடங்கி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலைவிநாயகர் கோவில், ஜெய்காளியம்மன் கோவில் முன்பு உள்ள வீதிகளின் வழியாக கோவிலை அடைந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு ரத்தகாளி அம்மனுக்கு சாமபூஜை, 12.30 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அருள்வாக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மன் படையல் சாதத்தினை குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு வழங்கினார்.

    9-ம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு கோவில் முன்பு ஏராளமான பக்தாகள் கலந்து கொண்ட பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு பாலவிநாயகர் கோவிலில் இருந்து 204 பேர் முளைப்பாரி எடுத்து சென்றனர். மதியம் 12.30 மணிக்கு முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு அன்னாபிஷேகம், 1.30 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×