search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural development program"

    தலைஞாயிறு ஒன்றியத்தில் வேளாள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் நான்கு இடங்களில் உழவர் வேளாண்மைத் துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    முன்னதாக பன்னத்தெரு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரும் தி.மு.க ஒன்றிய செயலாளாருமான மகாகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினகுமார் , உதவி விதை அலுவலர்கள் ரவி, ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதேபோல வாட்டாகுடி, நாலுவேதபதி, கோவில்பத்து ஊராட்சிகளில் நிகழ்ச்சியில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமிழரசி, வேளாண் அலுவலர் நவீன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் கற்பகம் நீலமேகம், ஞானசுந்தரி , ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, கஸ்தூரி, ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    இந்த நிகழ்ச்சியில் 800 குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 2400 தென்னங்கன்று களும் 50 சதவீத மானியத்தில் தார்பாய், பிரேயர் உள்ளிட்ட–வைகளும், 75 சதவீத மானியத்தில் உளுந்தும், 90 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் மண்வெட்டி, கடப் பாறை உள்ளிட்ட பொருட்களும் இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    • தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.
    • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    உடுமலை :

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தகடவு, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, பண்ணைக்கிணறு, கொசவம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இக்கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி, கால்நடை, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

    குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, திட்டத்தின் நோக்கம், வேளாண் துறை சார்பில் தரிசு நில மேம்பாடு, உபகரணங்கள் மானிய விலையில் வழங்குதல், தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.

    கிராமங்களுக்கு தேவையான தடுப்பணை, குட்டைகள், சமுதாய உறிஞ்சு குழிகள், ரோட்டோர மரக்கன்று நடுதல், வண்டிப்பாதை, மண் சாலை அமைத்தல், உலர் களம், தானிய கிடங்கு கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பண்ணை குட்டை, வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.திட்ட கிராமங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், ஆமந்தகடவு - கோதண்டபாணி, கொங்கல்நகரம் -- செந்தில்குமார், சோமவாரபட்டி - ஜெயலட்சுமி, பண்ணைக்கிணறு - அசாருதீன், கொசவம்பாளையம் - கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டு கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    ×