search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural Development Programme"

    • நீடித்த வேளாண்மைக் கான தேசிய திட்டம் (என்.எம்.எஸ்.ஏ) என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளே அடங்கி இருக்கும் விரிவான ஒரு பகுதியே பாரம்பரிய விவ சாய மேம்பாட்டுத் திட்டம் (பி.கே.வி.ஒய்) என்பதாகும்.
    • இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீடித்த வேளாண்மைக் கான தேசிய திட்டம் (என்.எம்.எஸ்.ஏ) என்ற மிகப்பெரிய திட்டத்தின் உள்ளே அடங்கி இருக்கும் விரிவான ஒரு பகுதியே பாரம்பரிய விவ சாய மேம்பாட்டுத் திட்டம் (பி.கே.வி.ஒய்) என்பதாகும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் ஈடுபடக்கூடிய கிராமங்க ளைத் தத்தெடுத்து அவற்றை ஒரு தொகுப்பாக அணுகியும், விவசாயி - அரசு இ-சேவை அல்லாத 3-வது ஒரு அமைப்பிடமிருந்து சான்றி னைப் பெற்றும் இயற்கை வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்படுகிறது.

    இந்தத்திட்டத்தில், வேளாண் விளைபொருள்கள் பூச்சிக்கொல்லி மருந்துப்படிவுகள் இல்லாத வையாக, நுகர்வோரின் உடல்நலத்தை மேம்படுத்தக்கூ டியதாக இருக்கும்.

    விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, இயற்கை வளங்களைத் திரட்டி இடுபொருள்களை உருவாக்க விவசாயிகளை ஊக்குவிக்கும். இத்திட்டம் நமது பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×