என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Agricultural Society"
- காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதுச்சேரி:
காரைக்கால் மற்றும் தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க அமைப்பா ளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
- இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது.
- நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது. அத்தியூரில் தொடங்கிய நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார். இந்த பிரசார நடைபயணம் சின்னகொள்ளியூர், சிவபுரம், ஓடியந்தல் கிராமங்கள் வழியாக வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூமாலை, ஆட்டோ சங்கத் தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் உத்தரக்கோட்டி, பாலமுருகன், அம்பிகா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் ஆதார விலை வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துத வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
- உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும்.
- திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம் விவசாயிகளை மிரட்டி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அன்றாடம் ஒரு சட்டம், புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. அவைகள் விவசாயிகள், ஏழை எளிய மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. தற்போது புதிய அறிவிப்பாக பொது விநியோகத் திட்டத்தில் அங்காடி மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
பாரம்பரிய அரிசியின் பெருமைகள் குறித்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பலர் கூறியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக தி.மு.க அரசு செயல்படுகிறதோ என அச்சம் எழுகிறது. உடனடியாக இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி மூத்த வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.
பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது வேதனை அளிக்கிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். ஓராண்டுக்கு முன்பே அரசை நம்பி கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் அதனை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். உடனடியாக பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி ஒத்த கருத்துள்ள விவசாயிகளை அழைத்து போராட்டம் நடத்த தயங்கமாட்டோம்.
தஞ்சை மாவட்டம் திருமண்டக்குடி சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தற்போது திருமண்டக்குடி சர்க்கரை ஆலையை வாங்கிய நிர்வாகம் விவசாயிகளை மிரட்டி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கல்லணை கட்டுமானத்துக்காக சிறந்த விருது வழங்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறோம். அதே வேளையில் கல்லணைக்கு யுனெஸ்கோ விருது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சிப்காட் வளாகம் அமைப்பதாக அரசு அறிவிப்பு இப்பகுதி மக்களை வஞ்சிப்பதாக தெரிகிறது.
- கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி.சிப்காட் திட்டம் இங்கு வராது என வாக்குறுதி கொடுத்தார்.
அவினாசி:
அவினாசி பகுதியில் சிப்காட் வராது என அரசாணை வரும் வரை போராட்டம் தொடரும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க அவினாசி ஒன்றிய தலைவர் எம்.வேலுசாமி உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அவினாசி ஒன்றியம் தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி.சிப்காட் திட்டம் இங்கு வராது என வாக்குறுதி கொடுத்தார்.
சிப்காட் வளாகம் அமைப்பதாக அரசு அறிவிப்பு இப்பகுதி மக்களை வஞ்சிப்பதாக தெரிகிறது. ஆகவே சிப்காட் திட்டத்தை கைவிடப்பட்டதாக அரசு இதழ்களில் அரசாணை வெளியிட்டு விவசாய குடும்பங்களை வாழ வழிவகை செய்ய வேண்டும். சிப்காட் வராது என அரசாணை வெளியிடும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.இறக்குமதி செய்யப்பட்டு ரேஷன்கடைகளில் விற்கப்படும் பாமாயிலுக்கு தடை விதித்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்திட வேண்டும்.
- மாநாட்டில் கட்சி பிரமுகர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மடத்துக்குளம்:
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்ட அளவிலான 7-வது மாநாடு மடத்துக்குளத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இம்மாநாட்டிற்கு தாலுகா தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநாட்டில் நல்லாறு - ஆனைமலையாறு திட்டங்களை நிறைவேற்றி பி.ஏ.பி. திட்டத்தை முழுமைப்படுத்திட வேண்டும். அப்பர் - அமராவதி அணை திட்டத்தை நிறைவேற்றி, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைத்திட வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை மீண்டும் கோவைக்கு மாற்றிட வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ 1 - க்கு ரூ.140 -ம் உரித்த தேங்காய் கிலோ 1 -க்கு ரூ.50-ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். வெங்காயம் சாகுபடி செய்து விலை வீழ்ச்சியால் நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். உயர் மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலங்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்கிட வேண்டும்.
நிலத்திற்கான இழப்பீட்டிற்கு அந்த கிராமத்தின் உயர்ந்த பட்ச வழிகாட்டி மதிப்பையும், சந்தை மதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், எண்ணெய் குழாய் திட்டங்கள், எரிவாயு குழாய் திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று வழியில் செயல்படுத்திட வேண்டும்.
பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம் ,எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51-ம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் நிலத்திற்கு நியாயமான விலையை தீர்மானித்து தவணை முறையில் பெற்றுக்கொண்டு நிலத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் கட்சி பிரமுகர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்