search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural works"

    • சிறு, குறு விவசாயிகள் இதுகுறித்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
    • விவசாய பணிகள் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு, பல்லடம் தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது

    பல்லடம்:

    100 நாள் திட்ட பணியாளர்களை பயன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு, பல்லடம் தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.

    இது குறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மோகனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. தென்னை மரங்களை சுற்றி வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு போடுதல் மற்றும் ஏரி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இப்பணிகளை மேற்கொள்ள விரும்பும் சிறு, குறு விவசாயிகள் இதுகுறித்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு சிறு, குறு விவசாயி சான்று, கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நகல் வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு போட்டோக்கள் ஆகியவற்றுடன் பல்லடம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • உயர் அழுத்த மின்மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.
    • உயர் அழுத்த மின்கம்பிகள் 6 அடி உயரத்தில் செல்வதால் விவசாயிகள் டிராக்டரை வயலிற்கு கொண்டு செல்லமுடியாத நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கிடாமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வழியாக கும்பகோணம், பூந்தோட்டம், மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் மெயின் சாலை உள்ளது.கணபதிபுரம், இடையாத்தாங்குடி, சேஷமூலை, கிடாமங்கலம், ஏர்வாடி, போலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளுர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்கால்- பூந்தோட்டம் சாலையில் கிடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்மாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.மேலும் மேற்கண்ட பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.மேலும் அந்த வழியாக செல்லும் லாரி, வேன், கார், பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை செல்ல முடியாத நிலை உள்ளது.தற்போது குறுவை நெல் சாகுபடி வேலைகள் நடைபெறுவதால் உயர் அழுத்த மின்கம்பிகள் 6 அடி உயரத்தில் செல்வதால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் விவசாய பணிகளை செய்ய விவசாயிகள் டிராக்டரை வயலிற்கு கொண்டு செல்லமுடியாமலும் அவதிக்கு ள்ளப்பட்டு ள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்த ப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடி க்கையும் எடுக்கவில்லை எனவும் பெரும் விபத்து கள் ஏற்படுவதற்குமுன்பு தாழ்வாக செல்லும் மின்க ம்பிகள் மற்றும் சேதமடைந்த மின்மாற்றியையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×