என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aiden Markram"
- இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும்.
- மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டி கடைசி ஓவரின், கடைசி பந்துவரை திரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.
ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை தொடர்களில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா அணி அசத்தியது. இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி வாய்ப்பை இந்தியாவிடம் பறிக் கொடுத்தது.
உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் ஏய்டன் மார்க்ரம் கூறும் போது, "மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும். வலிக்கிறது. ஆனால் பந்துவீச்சாளர்கள் மற்றும் மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்."
"நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். அவர்களை எங்களால் அடிக்க முடிந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். எனினும், கிரிக்கெட் எனும் தலைசிறந்த போட்டியின் சூழல் இன்று எங்களுக்கானதாக அமையவில்லை."
"நாங்கள் ஏராளமான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை அது முடியாமல் தான் இருந்தது. போட்டியின் போது நாங்கள் சவுகரியமான நிலைக்கு வரவேயில்லை. எங்கள் மீது ஸ்கோர் போர்டு அழுத்தம் இருந்தது. அந்த வகையில், இந்த இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நாங்கள் என்பதை உணர முடியும்."
"இந்த முடிவு நல்ல முறையில் அமையும் என்று நம்புகிறேன். கடுமையான போட்டி அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம், எங்களது திறமையை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவோம் என்று நம்புகிறேன், என்று தெரிவித்தார்.
- இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
- இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியை பற்றிய கருத்துகளை தென் ஆப்பிரிக்க அணிகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். தென் ஆப்பிரிக்காவிக் அணியின் கேப்டன் ஆன ஐடன் மார்க்ரம் இதுவரை கேப்டனாக போட்டியிட்டு விளையாடிய எந்த போட்டியிலும் தோற்றது கிடையாது.
யூ19 உலகக் கோப்பை 2014 ஆம் ஆண்டு 6 போட்டி, ஓடிஐ உலகப்கோப்பை 2023 2 போட்டி, டி20 உலகக் கோப்பை 2024 8 போட்டியிலும் இதுவரை மொத்தம் 16 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்திய அணியுடன் மோத இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை இந்திய அணியிடம் தோற்று தொடர் வெற்றியை இழக்குமா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- மார்க்ரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.
- இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும் ,இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் மார்க்ரம் தொடரில் இருந்து விலகியுள்ளார் முதல் 20 ஓவர் போட்டிக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் 7 நாட்கள் தனிமைபடுத்துலில் இருந்தார்.
இதனால் 3 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்
- மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் தனித்திறன் கொண்ட வீரர் உம்ரான்.
- கடந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் உம்ரான்.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் கிளாசெனின் அதிரடி சதத்தால் 186 ரன்கள் குவித்தது. இதையடுத்து இலக்கை விரட்டிய பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதம் மற்றும் டு பிளெஸ்சிஸ்-யின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக்குக்கு இடம் அளிக்கவில்லை. உம்ரான் கடந்த சில ஆட்டங்களாகவே அணியில் இடம் கிடைக்காமல் வெளியே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உம்ரான் மாலிக் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என தனக்கே தெரியவில்லை என ஐதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என்ன நடக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் தனித்திறன் கொண்ட வீரர் உம்ரான். இருந்தும் அவரது விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை" என மார்க்ரம் தெரிவித்தார். அவரது இந்த பதில் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
கடந்த ஐபிஎல் சீசனில் ஐதராபாத் அணிக்காக 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் உம்ரான். அதிவேக பந்து வீச்சுக்காக பரவலாக அறியப்படுபவர். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் 7 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி உள்ளார். அதன் மூலம் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி உள்ளார். இந்திய அணியிலும் விளையாடி வருகிறார்.
இதற்கு முன்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட வார்னர், 2021 சீசனின் போதே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு அந்த சீசனில் ஆடும் லெவனிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
- 28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐ.பி.எல். 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் கேப்டனாக இருந்தவர் மார்க்ரம். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்