search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ajay bisaria"

    • இந்திய தூதரக உயர் அதிகாரியாக பதவி வகித்தவர் அஜய் பிசாரியா.
    • அவர் பாலகோட் தாக்குதல் நடந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக முன்னாள் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் அஜய் பிசாரியா. இவர் சமீபத்தில் "தி ஆங்கர் மேனேஜ்மேன்ட்: இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைக்குரிய ராஜதந்திர உறவு" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

    அதில், பாலகோட் வான்வழித் தாக்குதலுக்கு பின் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராணுவ நெருக்கடியைத் தவிர்க்கும் முயற்சியில் பிப்ரவரி 27, 2019 அன்று பிரதமர் மோடிக்கு நள்ளிரவில் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக அதிகாரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும், சீனா இரு நாடுகளுக்கும் துணை மந்திரிகளை அனுப்பிவைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தன. ஆனால் தேவையில்லை என இந்தியா மறுத்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்ரவரி 14 அன்று இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தியது.

    அடுத்த நாள் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அப்போது இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்து, ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அப்போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக் கொண்டார். அவரை இந்தியா கொண்டு வர முயற்சி செய்தபோது, பாகிஸ்தான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இதனால் இந்தியா கடுமையான பதிலடிக்கு தயாரானது. இந்த நேரத்தில்தான் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார்.

    பிசாரியாவின் கூற்றுப்படி, அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் தெஹ்மினா ஜன்ஜுவாவுக்கு அந்நாட்டு ராணுவத்திடம் இருந்து, இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானை எந்நேரத்திலும் தாக்கலாம் என்ற செய்தி வந்தது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாட்டு தூதர்களிடம் இதுகுறித்து அவர்களுடைய நாட்டு தலைவர்கள் இந்தியாவிடம் பேசவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர். அப்போது ஒரு நாடு சார்பில், இந்தியாவிடம் நேரடியாக பேசுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான் டெல்லியில் இருக்கும்போது அப்போதைய பாகிஸ்தான் உயர் அதிகாரி சோஹைல் மஹ்மூத் என்னை தொடர்பு கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்க உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த, உங்கள் நாட்டின் பிரதமர் மோடியிடம் பேச விரும்புகிறார் என்றார். நான் பிரதமர் மோடி தற்போது தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளார். முக்கியமான தகவல் என்றால் தன்னிடம் தெரிவிக்கவும். நான் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கிறேன் என்றேன். அதன்பின் எனக்கு போன் அழைப்பு வரவில்லை என்றார்.

    டெல்லியில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து பிரதிநிதிகள் இந்தியாவின் வெளியுறவுச் செயலரிடம் அன்றிரவு "நிலைமையைத் தணிக்கவும், பயங்கரவாதப் பிரச்சனையை தீவிரமாக்க விடாமல் கையாள பாகிஸ்தான் தயாராக உள்ளது" என கூறியுள்ளனர்.

    அடுத்த நாள், இம்ரான் கான் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுதலை செய்வதாக ஊடகங்களிடம் அறிவித்தார். இம்ரான் கான், வர்தமானின் விடுதலையை "அமைதியான செயல்முறை" என்று குறிப்பிட்டாலும், அது இந்தியாவின் கட்டாய ராஜதந்திரத்தின் விளைவு என சுட்டிக்காட்டுகிறார்.

    பிரதமர் மோடி பின்னர் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் இந்த சம்பவத்தைக் கூறுகையில், "அதிர்ஷ்டவசமாக, விமானி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்தது. இல்லையெனில் அன்று இரவு ரத்தக்களரி நடைபெற்றிருக்கும்" என தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria
    புதுடெல்லி:

    புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதரை நேரில் வரவழைத்து  இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நேற்றைய தாக்குதல் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதர் அஜய் பிசாரியா-வை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



    புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலான சில ஆதாரங்களை முன்வைத்து இந்த பிரச்சனையை மையப்படுத்தி இந்திய தூதரகத்தின் மூலம் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. #PulwamaAttack #IndianHighCommissioner #AjayBisaria 
    பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான் கானுடன் இந்தியாவின் உயர்தூதர் அஜய் பிசாரியா இன்று சந்தித்தார். #ImranKhan #AjayBisaria #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் ஆட்சியில் இருந்தபோது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பின்னடைவு காணப்பட்டது. இதனால் தற்போது வரும் பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக இம்ரான் கூறியிருந்தார்.



    இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர்தூதரான அஜய் பிசாரியா இன்று இம்ரான் கானை சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமராக பதிவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்த அஜய் பிசாரியா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை இம்ரான் கானுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். #ImranKhan #AjayBisaria #Pakistan
    ×