search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alagamman Temple"

    • சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி மண்டல பூஜை நடந்து வந்தது.
    • இதனையடுத்து மண்டல பூஜை நிறைவு விழா 2 நாட்கள் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தேவி அழகம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை யொட்டி மண்டல பூஜை நடந்து வந்தது. இதனையடுத்து மண்டல பூஜை நிறைவு விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல்நாள் நெல்லை முத்தையா சிவநெறி அருள்பணி மன்றத்தாரின் திருவாசகம் முற்றோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருங்குளம் செங்கோல் ஆதீனம் திருக்கைலாய பரம்பரை 103-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீசிவபிரகாச தேசிய சத்தியஞான பராமாச்சாரியார் பங்கேற்று அருளாசியுரை வழங்கினார்.

    2-ம் நாளில் விநாயகர் பூஜை, கோபூஜை, வருண பூஜை,வேதிகா அர்ச்சனை, 108 சங்கு பூஜை, 108 கலச பூஜை, வேத பாராயணம், கணபதி ஹோமம், சுதர்சன ஹோம்ம, லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவகிரக ஹோமம், 9 மணிக்கு பூரணகுதி, வஸ்திரா குதி, 9.45 மணிக்கு தேவிஸ்ரீ அழகம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அழகு விநாயகர், கன்னிமூல விநாயகர், தேவி அழகம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், தீபராதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலை 6 மணிக்கு சிறப்பு சந்தன காப்பு , அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8 மணிக்கு படைப்பு பூஜை, தீபாரதனை நடைபெற்றது. 

    • சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது.
    • அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அழகம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 5 நாட்கள் நடந்தது. முதல் நாள் கோ பூஜைகளும் பிர ம்மச்சாரி பூஜைகளும், இரவு கிராம சாந்தி தீபாராதனை நிகழ்ச்சியும், 2-ம் நாள் அன்று காலையில் தீபாராதனைகளும், இரவு ஏழு மணிக்கு கும்ப அலங்காரம் , மங்கல இசை தேவாரம், விஷேச சாந்தி சூரிய பூஜைகளும் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதிகாலை 3 மணிக்கு ரட்சாபந்தனன் பரிசோதி நாடி நந்தனம், பரிவார மூர்த்தி பூர்ண கோரி யாத்திர தனமும் மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார விமானம மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். இதைப்போல் அழகம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    இரவில் அம்மாள் அலங்கார தோற்றத்தோடு சப்பரப்பவனி நடந்தது. மெயின் ரோடு வழியாக செண்டா மேளத்தோடு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் ஆலயம் சேர்ந்து பின் அழகம்மன் கோவில் தெரு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது. இதனை யொட்டி இரவில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் சண்டிகேஸ்வரி பைரவ பூஜைகளும் தீபாராதனைகளும் மங்கல ஆரத்தியும் நடைபெற்றன.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன் செய்திருந்தார்.

    ×