search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Albert Einstein"

    • அமேரிக்கா அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார்.
    • அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று ஐன்ஸ்டீன் எண்ணினார்.

    அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டிற்கு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

    இந்த கடிதம் அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல மனித உயிர்களை பறிபோக காரணமாக இருந்ததால் அதற்காக பின்னாட்களில் ஐன்ஸ்டீன் மனம் வருந்தினார்.

    அமெரிக்க அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவை பார்த்து ஐன்ஸ்டீன் வேதனை அடைந்தார். அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று அவர் எண்ணினார்.

    நியூயார்க்கில் உள்ள பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகத்தில் ஐன்ஸ்டீனின் அசல் கடிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐன்ஸ்டீனின் கடிதங்கள் ஏலம் விடுவது ஒன்றும் இது முதன் முறையல்ல. ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும் அவர் எழுதிய கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது.

    • இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர்.
    • வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம்.

    இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்...?

    இடதுகை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

    இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

    வலதுகை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடதுகை பழக்கமுள்ளவர்கள்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில்கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.

    அதேபோல வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

    அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள்தான்.

    இடதுகை பழக்கம் உள்ளவர்களது மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வைத் திறன் இருக்கிறது.

     இடது கை பழக்கம் உண்டாவது ஏன்?

    ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவர் இடது கை பழக்கம் உடையவர் என தீர்மானிக்கப்படுவதாகவும், அது நம் உயிரியலில் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தகவல் கூறிகிறது. நாம் அதிகமாக பயன்படுத்தும் கைகளுக்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நம் முதுகுத்தண்டில் உள்ள சில தனித்துவமிக்க மரபணு செயல்பாடுதான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கு முன்பு வரை, மூளையின் எந்த பக்கம் அதிக செயல்பாட்டோடு இருக்கிறதோ, அதை பொறுத்துதான் ஒரு நபர் வலது கை பழக்கம் உள்ளவரா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா என்பது தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது வந்துள்ள ஆய்வின் முடிவு இந்த கருத்தை தகர்த்துள்ளது. கர்ப்பமடைந்து 8 முதல் 12 வாரத்திற்கு இடைபட்ட காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு வளர ஆரம்பிக்கும். இந்த ஆய்விற்காக கருவில் உள்ள குழந்தைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆய்வாளர்கள்.

    நமது அசைசவுகளை மூளை கட்டுப்படுத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நமது முதுகுத்தண்டில் உள்ள பகுதிகளே நம்முடைய கைகள், கால்கள் மற்றும் பாதங்களுக்கு சிக்னல் கொடுக்கிறது. நாம் வலது கையில் எழுதப் போகிறோமா அல்லது இடது கையிலா என்பதை இந்த செயல்பாடுதான் தீர்மானிக்கிறது.

    தாயின் கருவிற்குள் குழந்தை இருக்கும் போதே, வெளிப்புற காரணிகளின் தூண்டுதல் இதற்கு காரணமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். நொதிகள் எப்படி இயங்க வேண்டும் என மாற்றக்கூடிய ஏதோவொரு விஷயம் குழந்தையை சுற்றி இருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நொதிகளின் செயல்பாட்டையே மரபணுக்களும் பின்பற்ற தொடங்குகிறது.

    முதுகுத்தண்டில் தனித்துவமான மரபணு செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எதிர்காலத்தில் ஒரு குழந்தை இடது கை பழக்கமா அல்லது வலது கை பழக்கமா என்பதை இவைதான் தீர்மாணிக்கிறது.

    மேலும், கருவில் உள்ள குழந்தை பெருவிரலை வாயில் வைத்து சப்பும் பழக்கத்திற்கும், அக்குழந்தை இடது கை அல்லது வலது கை பழக்கம் உடையதா என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதற்காக கருவில் இருக்கும் 274 குழந்தைகளை ஆய்வு செய்த போது, 13-வது வாரத்தில் 90 சதவீதம் கருவில் உள்ள குழந்தைகள் தங்களது வலது கை பெரு விரலை வாயில் வைக்கின்றன.

    அதேசமயத்தில் வெறும் 10 சதவீதம் கருக்களே தங்களது இடது கை விரலை வாயில் வைக்கின்றன. இதே குழந்தைகள் பிறந்ததும், கருவில் இருக்கும் போது வலது கையை பயன்படுத்திய 60 குழந்தைகள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடது கையை பயன்படுத்திய 15 குழந்தைகளில் ஐந்து பேர் தற்போது வலது கை பழக்கம் உடையவர்களாகவும் பத்து பேர் இடது கை பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தத்துவ அறிஞர் எரிக் குட்னிட் என்பவருக்கு எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது. #AlbertEinstein
    நியூயார்க்:

    ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

    அவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. அறிவியலுக்கும், மதத்துக்கும் இடையேயான விவாத பொருளை மையமாக கொண்டது.

    எனவே, இதை ‘கடவுள் கடிதம்’ என அழைக்கின்றனர். அந்த கடிதம் நியூயார்க்கின் கிறிஸ்டி மையத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

    இக்கடிதத்தை வாங்க ஆன்லைனில் கடும் போட்டி நிலவியது. முடிவில் அது ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.

    அந்த கடிதம் ரூ.7 கோடி முதல் ரூ.7 கோடியே 70 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ.20 கோடிக்கு ஏலம் போனதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐன்ஸ்டீன் கடிதங்கள் ஏலம் விட்டது இது முதன் முறையல்ல. ஏற்கனவே அவரது கடிதங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. #AlbertEinstein
    ×