என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "alcohol smuggling"
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெறுகிறது. இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க கலால்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப்போது வேகமாக வந்த ஒரு வாகனத்தை சோதனையிடுவதற்காக போலீசார் கை காட்டியபோது, அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர், கை காட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைலாஷ் சவுத்ரி (58) மீது இடித்துவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதில் பலத்த காயமடைந்த கைலாஷ் சவுத்ரி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின்போது, மற்றொரு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. #HomeGuardKilled
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் 12 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டனர். மொத்தம் அந்த அட்டை பெட்டிகளில் 630 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் இருந்தன.
இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயராமன் (வயது 38), கார்த்திகேயன் (34) என்பதும், இவர்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்களை கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு மற்றும் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சோதனை சாவடியில் கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பாண்டிச்சேரியில் இருந்து வந்த தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது பஸ்சில் 25 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பஸ்சுடன் அதனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சீனிவாசன் (வயது40) மற்றும் நாகூரை சேர்ந்த கிளீனரை கைது செய்தனர்.
இதேபோல் பாண்டிச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டை நோக்கி சென்ற சரக்கு வேனையும் போலீசார் சோதனையிட்டனர். அதில் 15 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
அதனையும், வேனையும் பறிமுதல் செய்த போலீசார் வேனில் வந்த பேச்சிமுத்து (20), முருகன் (30), தென்காசி விவேகானந்தன்(22) ஆகியோரை கைது செய்தனர்.
மது கடத்தல் குறித்து மதுவிலக்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் துறைமுகம் சாலையில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். 4 மூட்டைகளில் சாராய பாக்கெட்டுகள் இருந்தன.
இதனைத் தொடர்ந்து அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் புதுவை பாகூர் மாதா கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி (21) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக 2 கார்களில் எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, பாபு மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் திண்டிவனம்-மரக்காணம் சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 21 கேன்களில் 735 லிட்டர் எரிசாராயம் இருப்பதை கண்டறிந்தனர்.
இதைதொடர்ந்து காரில் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்தவர்கள் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு பகுதியை சேர்ந்த அய்யனார் (50), ராவணாபுரத்தை சேர்ந்த தாமோதரன்(32), ஆறுமுகம்(30), முருகன்(32), கீழ்இடையாளம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி(50) என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எரிசாராயம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் மற்றும் 735 லிட்டர் எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
சேதராப்பட்டு:
கோட்டக்குப்பம் அருகே உள்ள ஆளத்தூரில் இன்று அதிகாலை கோட்டக்குப்பம் சரக மதுவிலக்கு இன்ஸ் பெக்டர் அரிகரன், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஆம்னி கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். உள்ளே 12 அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை திறந்து பார்த்தபோது மதுப்பாட்டில்கள் இருந்தன. மொத்தம் 750 மதுப்பாட்டில்களும், 50 லிட்டர் சாராயமும் இருந்தது.
இதைத்தொடர்ந்து காரில் இருந்த சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த தியாகு (வயது 30), புதுவையைச் சேர்ந்த பாபு (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுப்பாட்டில்கள் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது.
போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும் மதுப்பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்