என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ambal Vidyalaya School"
- சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
- கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளாத்திகுளம்:
இலங்கையில் நடைபெற உள்ள இண்டோ ஸ்ரீலங்கா சர்வதேச கராத்தே போட்டிக்கு விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ்-2 மாணவன் ஹர்ஷத் ராஜ், 9-ம் வகுப்பு மாணவன் ஆதித்யா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
வருகிற 24, 25 -ந் தேதிகளில் இலங்கையில் நடைபெற உள்ள இந்த சர்வதேச கராத்தே போட்டிக்கு சோபுகாய் கோஜ்ரியோ கராத்தே- டூ இந்தியா சார்பில் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்சி சுரேஷ்குமார் தலைமையில் இவர்கள் பங்கேற்கின்றனர்.
கராத்தே போட்டிக்கு தேர்வாகிய மாணவர்கள் மாநில மற்றும் தேசிய கராத்தே போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப் போட்டியில் பங்குபெறும் மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் மாயாதேவி, பள்ளி நிர்வாக அலுவலர் ராகவன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.
- முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டய தேர்வு நடைபெற்றது. பள்ளி முதல்வர் மாயாதேவி தலைமை தாங்கினார்.
இம்முகாமில் சோபுகாய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட சோபுகாய் கோஜூரியு கராத்தே பள்ளியின் தலைவர் சென்சாய் செந்தில் மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்களான கார்த்தி அங்குவேல், கார்த்திகேயன், அம்பாள் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா செய்திருந்தார்.
- திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரில் கராத்தே பயிற்சி முகாம் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது.
- இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
விளாத்திகுளம்:
திண்டுக்கல் மாவட்டம் ஆடலூரில் கராத்தே பயிற்சி முகாம் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தென்மாவட்டங்களில் இருந்து பல்வேறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஸ்ரீஅம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த தீபக், மிதுல பிரகதீஸ் சுடலை, அகில், ராமகிருஷ்ண, ரவிசங்கர், ஹர்ஷத்ராஜ் ஆகிய மாணவர்கள் பங்கு பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
முகாமில் தலைமை பயிற்சியாளராக சோபுக்காய் கோஜு ரியு கராத்தே இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் பயிற்சி அளித்தார்.
பயிற்சி முகாமில் பங்கு பெற்று மாநில போட்டிக்கு வெற்றி பெற்ற மாணவர்களை ஶ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் முதல்வர் மாயாதேவி மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா, பெற்றோர்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்