என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "American scientist"
- 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது திடீரென டிக்கிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
- முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்காரா:
அமெரிக்காவை சேர்ந்தவர் மார்க் டிக்கி (வயது 40). உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்ட அவர், குகை மீட்புப்பணி நிபுணராகவும் உள்ளார். இந்தநிலையில் தென்துருக்கியின் டாரஸ் மலைத்தொடர் பகுதியில் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட மோர்கா குகையை ஆய்வு செய்ய இறங்கினார். அவருடன் இயற்கை நல ஆர்வலர்கள் சிலரும் குகையை சுற்றிப்பார்க்க இறங்கினர்.
இந்தநிலையில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டபோது திடீரென டிக்கிக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. இதனால் குகையில் இருந்து வெளியேற முடியாமல் அவர் சிரமப்பட்டார். இதுகுறித்து அவருடன் சென்ற குழுவினர் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் இத்தாலி, ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மீட்புப்பணி நிபுணர்கள், டிக்கியை மீட்க துருக்கி விரைந்தனர். இந்த மீட்புப்பணியின்போது இரவு, பகல் பாராமல் பல்வேறு நாட்டை சேர்ந்த டாக்டர்களும் அந்த குகைக்குள் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்தநிலையில் 10 நாட்களுக்கு பிறகு மார்க் டிக்கி குகையில் இருந்து உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
- இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த திருமணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.
அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இதனை நடத்தி கொடுக்க இஸ்ரேலை சேர்ந்த மதகுரு வந்திருந்தார். அவர் முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். அடுத்து கெதுபா படித்து, கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.
இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது, என்றனர்.
- 73 நாட்கள் நீருக்கடியில் வசித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.
- தண்ணீரில் 30 அடி ஆழத்தில் 100 சதுர அடி வீடு அமைத்து அங்கு தங்கி உள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
உலக சாதனை படைக்க ஒவ்வொருவரும் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் 73 நாட்கள் நீருக்கடியில் வசித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இதனை முறியடிக்க அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜோடிடுரி என்பவர் முடிவு செய்தார். அவர் 100 நாட்கள் நீருக்கடியில் இருக்கபோவதாக கூறியுள்ளார்.
இதற்காக கடந்த மாதம் 1-ந்தேதி கீ லார்கோவில் உள்ள ஜூல்ஸ் அண்டர்சீயில் இந்த சாதனையை தொடங்கி உள்ளார். தண்ணீரில் 30 அடி ஆழத்தில் 100 சதுர அடி வீடு அமைத்து அங்கு தங்கி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்