என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Amethi Constituency"
- அமேதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.
- கேஎல் சர்மா சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.
அமேதி தொகுதி காங்கி ரஸ் வேட்பாளராக கேஎல் சர்மா அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் கட்சியினரே ஆச்சரியம் அடைந்தனர். நாடு முழுவதும் யார் இந்த கேஎல் சர்மா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முதலாக இந்த தொகுதியில் ராகுல் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார்.
இதன் மூலம் இந்த தொகுதி காங்கிரசிமிருந்து பா.ஜ.க. கைக்கு மாறியது. அங்கு மீண்டும் ஸ்மிருதி இரானி இந்த தடவை களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தடவையும் ராகுல் அங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வயநாடு தொகுதியில் களம் இறங்கிய ராகுல் அமேதியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, இந்திராகாந்தியின் உறவினர் ஷீலா கவுலின் பேரன் ஆகிய இருவரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அனை வரது எதிர்ப்பார்ப்பையும் தகர்க்கும் வகையில் கேஎல் சர்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் சோனியா குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமானவர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர். காங்கிரசில் சேர்ந்து அந்த கட்சிக்காக சேவையாற்றி வந்த அவர் 1983-ம் ஆண்டு ரேபரேலி தொகுதிக்கு வந்து தொகுதி பொறுப்பாளராக பதவி ஏற்றார்.
அன்று முதல் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தியின் தனிப்பட்ட அன்பை சம்பாதித்தார். ராஜீவ்காந்திக்காக அவரது பிரதிநிதி போல அவர் ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.
ராஜீவ் மறைவுக்கு பிறகு சோனியா குடும்பத்தினருடன் சர்மாவுக்கு மேலும் நட்புறவு அதிகரித்தது. சோனியா ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த 4 தடவையும் அவரது பிரதிநிதியாக ரேபரேலி தொகுதியில் பணியாற்றி வந்தார்.
இன்னும் சொல்லப் போனால் அறிவிக்கப்படாத எம்.பி. போலவே அவர் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி பணிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக அந்த தொகுதியில் அவருக்கு அதிக பேருடன் தொடர்பு ஏற்பட்டது.
2004-ம் ஆண்டு ராகுல்காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்ட போது அங்கும் சென்று ராகுலுக்காக கட்சி பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டார். 2009, 2014, 2019 தேர்தல்களிலும் அமேதி, ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் பொறுப்பாளராக பணியாற்றினார்.
அவரது சேவையை கவுரவிக்கும் வகையிலேயே சோனியா அவரை அமேதி தொகுதி வேட்பாளராக களம் இறக்கி உள்ளார். ராகுலுக்கு பதில் அவர் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அமேதி தொகுதியை தன்வசமாக்கி வைத்திருக்கும் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானிக்கு கேஎல் சர்மாவால் நெருக்கடி கொடுக்க இயலுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
- அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார்.
- வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்’ என்று கூறினார்.
அமேதி:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வி அடைந்தார்.
அங்கு மீண்டும் போட்டியிட தைரியம் உண்டா? என ராகுல் காந்திக்கு ஸ்மிரிதி இரானி சவால் விட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அமேதியின் முன்னாள் எம்.பி., தொகுதி மக்களை வயநாட்டில் இழிவுபடுத்தினார். ராம் லல்லாவின் அழைப்பை அவரும் அவரது குடும்பமும் நிராகரித்தது. இதனால் அமேதி மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். வருகிற தேர்தலில் அமேதியில் மட்டும் போட்டியிட தயாரா? என அவருக்கு சவால் விடுகிறேன்' என்று கூறினார்.
அமேதியில் ராகுல் காந்தியின் யாத்திரையை வெறிச்சோடிய தெருக்கள்தான் வரவேற்றதாக கூறிய ஸ்மிரிதி இரானி, இதனால் சுல்தான்பூர் மற்றும் பிரதாப்கரில் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை வரவழைத்து வந்திருப்பதாகவும் கிண்டல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
அமேதி தொகுதியில் 3 தடவை தொடர்ச்சியாக வென்று எம்.பி.யாக தேர்வான ராகுல் இந்த தடவை வயநாடு தொகுதிக்கு தாவியது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி போட்டியிட்டார். இந்த தடவை அவரது பிரசாரம் மிக தீவிரமாக இருந்தது. எனவே ராகுல் தோல்வி அடைந்து விடுமோ என்று கருதி வயநாடுக்கு சென்று விட்டதாக விமர்சனம் எழுந்தது.
அமேதி தொகுதியானது காங்கிரசின் கோட்டையாக திகழும் தொகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக நேரு குடும்பத்தினருக்கு இந்த தொகுதி மிகவும் கை கொடுப்பதாக இருந்து வந்தது. ஆனால் இந்த தடவை மக்கள் ராகுலை கைவிட்டது ஏன் என்பது புரியாமல் காங்கிரசார் தவித்து வருகிறார்கள்.
ராகுலுக்கும் அமேதி மக்கள் தனக்கு வெற்றியை தராதது ஏன் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதற்கு விடை காண்பதற்காக அவர் 2 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஜூபைர்கான், ரேபரேலி தொகுதி பொறுப்பாளர் கே.எல்.சர்மா இருவரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் இன்னும் ஓரிரு நாட்களில் அமேதி தொகுதிக்கு செல்ல இருக்கிறார்கள். ராகுல் மீது அதிருப்தி ஏற்பட என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது பற்றி அவர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்.
அந்த ஆய்வை அவர்கள் அறிக்கையாக தயாரித்து ராகுல்காந்தியிடம் ஒப்படைக்க உள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் ராகுல் தன்னை மாற்றிக் கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கடந்த 19-ந்தேதியுடன் நிறைவு பெற்றது.
இதைத்தொடர்ந்து வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை பா.ஜனதா களம் இறக்கியது.
ஆனால், ராகுல்காந்தி அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி பெறுவார். அமேதியில் அவர் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரசார் தெரிவித்தனர். என்றாலும் ராகுலுக்கு எதிராக ஸ்மிருதி இரானி தீவிரமாக பிரசாரம் செய்தார்.
அமேதியில் 5-ம் கட்ட தேர்தலாக கடந்த மே-6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 57,33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் மாலை முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாயின.
இந்தியா டுடே, சி.என்.எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறும் போது, “ராகுல்காந்தி அமேதியில் வெற்றி பெறுவார். ஆனால் ஸ்மிருதி இரானி அவருக்கு கடும் போட்டியைத்தருவார். அதனால் வாக்குகள் வித்தியாசம் பயமுறுத்தும் வகையில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்:
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில் மந்திரியாக உள்ளார்.
இந்த நிலையில் சித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-
70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பா.ஜனதா கூறுவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்திய விமானபடைக்கு அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டது.
சோனியா காந்தியிடம் இருந்து தேசப்பற்றை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். ராஜீவ் காந்தி மறைவுக்கு பிறகு காங்கிரசை திறமையாக வழிநடத்தினார். அவரது திறமை காரணமாக தான் மத்தியில் காங்கிரஸ் 10 ஆண்டுகள் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதாவுக்கு விசுவாசமாக இருந்ததால் அவர்களை தேசியவாதி என்றும் எதிர்த்தால் தேச விரோதி என்றும் கூறுகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்றால் நான் அரசியலை விட்டே விலக தயார். ரபேல் விமான விவகாரத்தால் மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவார்
இவ்வாறு அவர் கூறினார். #Sidhu #RahulGandhi
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அமேதி பாராளுமன்ற தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன.
அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.
ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.
7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
காங்கிரசின் இந்த புகார் காரணமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #RahulGandhi
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.
இதற்காக இன்று காலை அமேதியை அடைந்த ராகுல் காந்தி, முன்ஷிகஞ்ச்-தர்பிபூர் பகுதியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். திறந்த வாகனத்தில் சென்ற ராகுலுக்கு வழிநெடுக தொண்டர்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிராயா ஆகியோர் உடன் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக காரில் சென்றார்.
ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. அமேதியில் 5-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. #RahulGandhi #LokSabhaElections2019 #RahulNomination
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நலத்திட்டங்களை பார்வையிடவும், மக்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் வரும் 24-ம் தேதி அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது அமேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது கவுரிகஞ்ச் நகரில் அமேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அம்மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், காங்கிரஸ் பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் சந்திப்பார் என அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திரா மிஸ்ரா இன்று தெரிவித்துள்ளார். #RahulGandhi #RahulAmethivisit
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்