search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amman Archunan MLA request"

    • 20-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, ஸ்ரீநக் முதல் எப்.சி.ஐ.ரோடு வரை தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது.
    • ஐஸ்வர்யா கார்டனில் கடந்த 11 ஆண்டுகளாக ரோடு, மழைநீர் வடிகால் வசதி இல்லை.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுணன், கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை வடக்கு சட்டமன்ற ெதாகுதியில் கோவை மாநகராட்சி 20-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, ஸ்ரீநக் முதல் எப்.சி.ஐ.ரோடு வரை தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும்.

    29-வது வார்டு அப்பநாயுடு லே-அவுட், வரதராஜ் லே-அவுட் ஆகிய இடங்களில் தார்சாலை மற்றும் மழைநீர்வடிகால் அமைக்க வேண்டும். ஐஸ்வர்யா கார்டனில் கடந்த 11 ஆண்டுகளாக ரோடு, மழைநீர் வடிகால் வசதி இல்லை. 47-வது வார்டு பூங்காவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை.

    மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பூங்கா போதிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் அவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    மேலும் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. 42-வது வார்டு வ.உ.சி.நகர், சிவகாமி நகர் வீதிகளில் கான்கிரீட் நடைபாதை, தார்ரோடு, சாஸ்திரி ரோடு, கண்ணபிரான் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.

    ரத்தினசபாபதி வீதி, சின்னம்மாள் வீதி, மணியம்காரியப்பன் வீதி, மருதகுட்டி வீதி, ஜானகி நகர், உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. இதனால் போக்குவரத்து பரிப்பு ஏற்படுகிறது. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    45-வது வார்டு அம்மாசை வீதி, நர்மதா வீதி, கோகுலம் வீதி, பழனிக்கோனார் வீதி, நஞ்சம்மாள் வீதி உள்ளிட்ட இடங்களில் தார்சாலை அமைக்க வேண்டும். 43, 44 மற்றும் 45-வது வார்டுகளிலும் சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    1,22,35 ஆகிய வார்டுகளில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும். இங்கு கடை திறக்க வேண்டும். இங்கு குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது அவருடன் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம், மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.

    ×