என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anti-Hooliganism Act"
- இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், பொன்மலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
- குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்
திருச்சி :
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து, குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இதற்கிடையே கடந்த 11.06.22 அன்று மேலக்கல்கண்டார்கோட்டை சோமசுந்தரம்நகர் சுடுகாட்டு பகுதியில், 19 வயது இளைஞர் ஒருவர் முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில், பொன்மலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில் காட்டுமலை (எ) அருண்குமார், மணிகுண்டு (எ) மணிகண்டன், ஹரீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காட்டுமலை (எ) அருண்குமார், மணிகுண்டு (எ) மணிகண்டன், ஹரீஸ் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடமுயற்சிப்பதும், ஆயுதங்களை கொண்டு கொலை செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3 பேரின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேற்கண்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதன்படி திருச்சி மத்திய சிறையில் உள்ள 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தியாகதுருகம் அருகே குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 26), இவர் தனது உறவினருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை முன்விரோதத்தின் காரணமாக கடந்த மாதம் கொலை செய்தார். இந்த வழக்கில் காவல்துறையினரால் ராமு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் இந்நிலையில் ராமுவின் செயலானது புது உச்சிமேடு கிராமத்தில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதுடன் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதாலும், இவர் வெளியே இருந்தால் வரும் காவலங்களில் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவரது நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்கண்ட ராமுவை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் நேற்று ராமுவை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்