search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Headset"

    • மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவதற்காக பிரத்யேகமான ஈவண்டை ஆப்பிள் நிறுவனம் நடத்த உள்ளதாம்.
    • மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை ரூ.3 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் அதன் மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அண்மையில் நடைபெற்ற WWDC 2022 ஈவண்ட்டில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் அதில் வெளியிடவில்லை. அதன் வெளியீடு தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்படி, ஆப்பிள் நிறுவனம் அந்த ஹெட்செட்டை அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல்களை சீனாவை சேர்ந்த ஆய்வாளரான மிங் சி கு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மிக்ஸிடு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவதற்காக பிரத்யேகமான ஈவண்டை ஆப்பிள் நிறுவனம் நடத்த உள்ளதாகவும், அதன் முன்பதிவு அடுத்தாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


    அடுத்த ஆண்டு நடைபெறும் WWDC எனும் டெவலப்பர்கள் மாநாட்டுக்கு முன்னதாகவே இந்த ஹெட்செட் விற்பனைக்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பில் சில சிக்கல்களை சந்தித்ததன் காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் விலை 3 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) சார்ந்த சாதனத்தின் உற்பத்தி பணிகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார். 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் காப்புரிமைகளில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் விர்சசுவல் ரியாலிட்டி சாதனம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. ஆப்பிளின் ஏ.ஆர். கண்ணாடிகள் கம்ப்யூட்டிங், ரென்டரிங், இண்டர்நெட் கனெக்டிவிட்டி மற்றும் லொகேஷன் சேவைளை பயனர் ஐபோனில் இருந்து டிஸ்ப்ளே செய்யும் என மிங் சி கியோ தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், ஆப்பிளின் ஏ.ஆர். சார்ந்த ஹெட்செட் ஐபோனுடன் இணைந்து பயனர்களுக்கு கம்ப்யூட்டர் புகைப்படங்களை நிஜ உலகின் மேல் பிரதிபலிக்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஹெட்செட் ஆப்பிள் உருவாக்கும் பிரத்யேக சிப் கொண்ட மற்ற சாதனத்துடன் வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் என கூறப்படுகிறது.



    இதுதவிர ஹெட்செட்டில் டச்-சென்சிட்டிவ் பகுதி இடம்பெற செய்ய ஆப்பிள் விரும்புவதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் சூழலுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் வெற்றி பெறச் செய்வதில் ஆப்பிள் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    புதிய ஏ.ஆர். ஹெட்செட்களின் உற்பத்தி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவுறும் பட்சத்தில் இந்த சாதனம் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஹாலோ லென்ஸ் 2 எனும் சாதனத்தை அறிமுகம் செய்தது.

    இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூன்றாண்டு பழைய சாதனத்தின் மேம்பட்ட புதுய வெர்ஷன் ஆகும். இந்த சாதனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 3500 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×