search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archaeologists find"

    • மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
    • வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்கா லத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டது.

    டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி கிராமத்தை சேர்ந்த பண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு குழி தோண்டிய போது பெரிய பாணை இருப்பதாக அவ்வூரே சேர்ந்த கணேசன் என்பவர் தகவலின்படி சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூ ரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையம் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆய்வு செய்த போது பெருங் கற்காலத்தை சேர்ந்த முது மக்கள் தாழி கண்டறி யப்பட்டது.

    உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜ் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நேரடியாக களத்திற்கு வந்து அவர் முதுமக்கள் தாழி கைப்பற்றி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:-

    இன்றைய தமிழ் சமூகத்தில் இறப்பு சடங்கு முறைக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக பெருங்கற்கால ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதி களிலும் காட்டுப் பகுதி களிலும் போட்டு விடுவார்கள். அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக உண்டப்பின்பு அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர்கள்.

    முதுமக்கள் தாழி பொதுவாக தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தாய் குறியீடு என்பது மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பினார்கள்.ஆகவே தாழியின் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றை போன்ற அமைக்கப்பட்டிருக்கிறது.

    நல்லமரம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி மேற்குப்பகுதியில் உடைந்த நிலையில் கிட்டத்தட்ட 7 அடி அழம் குழித் தோண்டும் போது கண்டறியப்பட்டது.முதுமக்கள் தாழியின் கழுத்துப்பகுதியில் வளையம் போன்ற ஆப ரணம் வரையப்பட்டுள்ளது.

    குறிப்பாக முதுமக்கள் தாழியின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி , சுற்றளவு 6.1 அடி, விட்டம் 1.5 அடி கொண்டதாகும் .இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைகள் ஓடுகள், உடைந்து நிலையில் உள்ளது. இவைபானை மேல்பகுதி மெல்லிய பானையால் மூடப்பட்டிருக்கலாம்.

    முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு மேல்பகுதி, கை கால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இப்பகுதியில் பெருங்கற்கால பண்பாடு முறை இருந்தற்கான சான்றாக கண்டறியப்பட் முதுமக்கள் தாழி காணப்படுகின்றது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கின்ற பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

    ×