search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested young men"

    கூத்தாநல்லூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 48). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் திடீரென மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இதுபற்றி திருவாரூர் மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் , மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

    வாலிபர் விக்னேஷ், மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு இருந்து வந்தது.

    இதுசம்பந்தமாக கடந்த 13-ந் தேதி போலீசார், வாலிபர் விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மாயமான மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் வாலிபர் விக்னேஷ், வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    டி.வி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதை தட்டிக்கேட்ட சித்தியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு பார்வதிபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமு, பெயிண்டர். இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக லட்சுமி (வயது36) என்ற பெண்ணை  திருமணம் செய்தார். முதல் மனைவி மூலம் ராஜேஷ் உள்ளிட்ட 2 மகன்களும், 2-வது மனைவி லட்சுமி மூலம்  2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் ஒரேவீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். லட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக  வேலைசெய்து வந்தார். 

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜேஷ் வீட்டில் அதிக சத்தத்துடன் டி.வி.யில்  பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில்  லட்சுமி செல்போன் அழைப்பு  வந்ததால் டி.வி. சவுண்டை குறைக்கும்படி  ராஜேசிடம் கூறினார். ஆனால் சவுண்டை  குறைக்காமல் ராஜேஷ் பிடிவாதம் செய்தார். 

    இதனால் ரஜேசை மிரட்ட போலீசில் புகார் செய்ய போவதாக  லட்சுமி கூறினார்.  இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த  லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில்  சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக  லட்சுமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த  புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
    பெரம்பலூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு போனது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சவுந்திரராஜன்(வயது 25) அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

    இந்த நிலையில் பெரம்பலூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், பெரம்பலூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன்(25) என்பதும், அவர் பெரம்பலூர் ரோஜா நகரை சேர்ந்த வேல்முருகன் மனைவி எழிலரசி(39), நேரு நகரை சேர்ந்த வசந்தா(30) ஆகியோரிடம் நகைகளும், பெரம்பலூரில் மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தில் செல்போன் மற்றும் மங்களமேடு பகுதியில் வீடுபுகுந்து நகை ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். 

    மேலும் அவரிடம் இருந்து 14½ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிரபாகரன் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
    பெரம்பலூர் அருகே இளம்பெண்ணிடம் தகாத முறையில் பேசி கையை பிடித்து இழுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    குன்னம்:

    பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சரண்யா (வயது 25). சம்பவத்தன்று சரண்யா கடையில் இருந்தார். அப்போது பெரம்பலூர் அருகே உள்ள கூடலூரை சேர்ந்த ரவி (28) என்பவர் கடைக்கு வந்துள்ளார். அவர் சரண்யாவிடம் தகாத முறையில் பேசி கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார். 

    இது குறித்து சரண்யா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ரவியை கைது செய்தனர்.

    சுரண்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    சுரண்டை:

    புளியங்குடி முத்துராமலிங்கம் 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (எ) முஸ்தபா இவர் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சுரண்டையில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற போது பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது புளியங்குடி, சொக்கம்பட்டி, திசையன்விளை, வீ.கே புதூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஷில்பா, முஸ்தபாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து சுரண்டை போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    ×