search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arvind Kejrwal"

    • விசாரணை நீதிமன்றம் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
    • அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததால் ஜாமின் நிறுத்தி வைப்பு.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

    இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தள்ளார்.

    சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன்பு உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டு என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். இன்று மாலை 4 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் வெளியில் வருவதாக இருந்தது. அவருக்கு சிறந்த வரவேற்பு கொடுக்க ஆம் ஆத்மி கட்சியினர் தயாராக இருந்தனர்.

    மக்களவை தேர்தலின்போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×