என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » asian championship
நீங்கள் தேடியது "Asian Championship"
- இந்திய அணி தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.
ஹுலுன்புயர்:
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகளும் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோதவேண்டும்.
லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதி 16-ம் தேதியும், இறுதிப்போட்டி 17-ம் தேதியும் நடக்கிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கிலும், 3வது ஆட்டத்தில் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன், அரையிறுதிக்கும் முன்னேறியது இந்திய அணி.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஷிவ தபா தொடர்ந்து 4-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #ShivaThapa #AsianChampionship
பாங்காக்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஷிவ தபா (60 கிலோ உடல் எடைப்பிரிவு) தாய்லாந்தின் ருஜக்ரன் ஜன்ட்ராங்கை 5-0 என்ற புள்ளி கணக்கில் துவம்சம் செய்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் 25 வயதான ஷிவ தபாவுக்கு குறைந்தது வெண்கலப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அவர் தொடர்ந்து 4-வது முறையாக பதக்கத்தை (2013-ல் தங்கம், 2015-ல் வெண்கலம், 2017-ல் வெள்ளிப்பதக்கம்) கைப்பற்றுகிறார். இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையை பெற்றுள்ள ஷிவ தபா அடுத்து கஜகஸ்தான் வீரர் ஜாகிர் சபியுலினை சந்திக்கிறார்.
பெண்கள் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான எல்.சரிதாதேவி (60 கிலோ) கஜகஸ்தான் வீராங்கனை ரிமா வோலோஸ்சென்கோவை தோற்கடித்து 9 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதியை எட்டினார். இதே போல் முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான இந்திய மங்கை நிகாத் ஜரீன் (51 கிலோ) 5-0 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனான நஸிம் கஸாபேவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் மொத்தம் 13 இந்தியர்கள் பல்வேறு எடைப் பிரிவுகளில் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #ShivaThapa #AsianChampionship
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X