search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ballot boxes"

    • 48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • 2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    மக்களவை முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய சென்னை வாக்குப்பெட்டிகள் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.

    அண்ணா பல்கலைக்கு வாக்குபெட்டிகள் கொண்டு வர கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

    48 லட்சம் வாக்காளர்களில் 56 சதவீதம் பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கட்டுப்பாடு அறையை திறக்க 2 சாவிகள் தேவைப்படும் வகையில் லாக் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருக்கும். மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடம் இருக்கும்.

    பூத் சிலிப் வாங்கியவர்களுக்கு பெயர் விடுபட்டதற்கு பழைய பட்டியலை வழங்கி இருக்கலாம்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும்.

    2019ஐ காட்டிலும் பெரும்பாலான தொகுதிகளில் 4 சதவீதம் வரை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    நகர்ப்புறங்களில் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாக்குப் பெட்டிகள் மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்படும்.
    • தேர்தல் நிறைவு பெறும் வரை, நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    உதவி தேர்தல் அதிகாரிகளிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் முழுமையாக நிறைவு பெறும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஆகியவற்றை கொண்டு வருதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார்.

    இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், சிறப்பு பேனா மற்றும் சீலிடப்பட்ட தேர்தல் பொருட்கள் டெல்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில சட்டசபை செயலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிக்கு விமானத்தில் தனி டிக்கெட் மூலம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.

    வாக்குப் பெட்டிகள் அனைத்து மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீலிடப்பட்டு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


    இந்நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு உரிய வாக்குப் பெட்டியை சென்னை விமான நிலையத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாந்தி ஆகியோரிடம், மாநில துணை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் சட்டமன்ற பேரவை துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்படைத்தனர். 

    ×