search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barbed fence"

    • விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முள் வேலி அமைக்கக்கூடாது என்று ஊராட்சி மன்றத்தலைவர் கோரிக்கை விடுத்தார்.
    • பாதையை மறிக்காமல் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் நாகராஜ் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநத்தம் ஊராட்சியில் சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது இந்த இடம் தரிசு நிலமாக முள் செடிகள் படர்ந்து காணப் படுகிறது. இந்த இடத்தில் சுமார் 150 மீட்டர் நீளத்திற்கு ஓ.பி.ஆர் நகர், பெரியார் நகர், டிப்ஜி நகர், ஏ.ஆர் நகர் போன்ற குடியிருப்பு கிராம மக்கள் அணுகு சாலையாக கடந்த 50வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது இந்த கோவில் இடத்தை சுற்றி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முள்வேலி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த பாதையில் முள்வேலி அமைத்தால் இப்பகுதி மக்கள் 1 கிலேமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். 5ஆயிரம் மக்கள் பாதிக்கப்படு வார்கள்.

    மேலும் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்கள் பயன் படுத்தும் பாதையை மறிக்காமல் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×