search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhadrakali amman"

    • பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் காமராஜர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பிரசாத் சர்மா தலைமையில் சிவாச்சாரி யார்கள் 2 நாள் யாக பூஜை நடத்தினர். பின்னர் சிவாச்சா ரியார்கள், நிர்வாகிகள் புனித நீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்தனர். கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பத்திரகாளியம்மன் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தலைவர் தங்கபாண்டியன், நிர்வாகிகள் ராஜகுரு, காமராஜ், ஜெயராஜ், கார்த்திகேயன், பாண்டியராஜன், கண்ணன்உள்ளிட்ட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 8-ந் தேதி பத்ரகாளியம்மனுக்கு பூர்வாங்க அபிஷேகம், காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு, பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லாக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு இன்னிசை கச்சேரிகளும் நடைப்பெற்றது.

    விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், அறங்காவல் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் ராமலிங்கம், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் காமராஜ், உறுப்பினர் அய்யாசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகல் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ×